லக்னோவைச் சேர்ந்த 21 வயதான பிரதிஷ்டா குப்தா என்ற Gen Z ஊழியர், தனது பணியிடத்தில் நிலவிய நச்சுத்தன்மை மற்றும் மிகக்குறைந்த ஊதியம் ஆகியவற்றைக் கண்டித்து, மிகவும் வெளிப்படையான ராஜினாமா மின்னஞ்சலை அனுப்பி இணையத்தில் வைரலாகியுள்ளார்.

மேலும் தனது மின்னஞ்சலில், “எனது அன்றாடப் பணிகளையும் வங்கிக் கணக்கையும் ஒப்பிட்டுப் பார்த்தபோது, நான் பெரும் ஏமாற்றத்தை உணர்ந்தேன்” என்று குறிப்பிட்டு, தான் ஒருவரே பல பணிகளைச் செய்து வந்ததாகவும், ஆனால் அதற்கு மிகக் குறைவான ஊதியமே வழங்கப்பட்டதாகவும் அவர் சாடியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by @pratsgoez

“>

இந்த மின்னஞ்சல் சமூக ஊடகங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அவர் வீடியோ எடிட்டர், டிசைனர், அனலிஸ்ட், SEO நிபுணர் எனப் பல பொறுப்புகளைத் தனியாகக் கையாண்டதையும், அதற்கான ஊதியம் மிகக் குறைவாக இருந்ததையும் கிண்டலாக விமர்சித்துள்ளார்.

இந்நிலையில் வேலையை விட்ட பிறகும்கூட, அலுவலகத் தரப்பில் இருந்து அடிப்படைப் பணிகளுக்காகத் தன்னைத் தொடர்பு கொண்டதைச் சுட்டிக்காட்டி, அந்த நிறுவனத்தின் தொழில்முறை சாராத செயல்பாடுகளையும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.