விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வானூர் பகுதியில் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி வசித்து வருகிறார். இந்த மாணவியும் திண்டிவனத்தை சேர்ந்த 18 வயது வாலிபரும் காதலித்து வந்தனர். நேற்று காவேரிப்பாக்கம் பகுதியில் பள்ளி மாணவியும் வாலிபரும் மயங்கி கிடந்தனர். அவர்கள் பாதாம் பாலில் பூச்சி மருந்து கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.

அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் காதல் ஜோடி எதற்காக தற்கொலைக்கு முயன்றனர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.