கேரள மாநிலம் கொல்லம் மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் உதயகுமார் என்பவர் நீதிபதியாக வேலை பார்த்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு விவாகரத்து வழக்கில் ஒரு இளம்பெண் விசாரணைக்காக வந்துள்ளார். அப்போது உதயகுமார் இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இதுகுறித்து கொல்லம் மாவட்ட நீதிபதியிடம் பாதிக்கப்பட்ட இளம்பெண் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் உதயகுமார் மீது விசாரணை நடத்த தலைமை நீதிபதி மற்றும் மூத்த நீதிபதிகளுக்கு உத்தரவு பிறப்பித்தது.

இதற்கிடையே நீதிபதி உதயகுமார் கொல்லம் மாவட்ட வாகன விபத்து தீர்ப்பாயத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அத்துமீறி இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த நீதிபதி உதயகுமாரை கேரளா உயர் நீதிமன்றம் பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.