கர்நாடக மாநிலம் சித்த குண்டே பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவரது மனைவி ஷில்பா(27). இந்த தம்பதியினருக்கு ஒன்றரை வயதில் குழந்தை உள்ளது. தற்போது ஷில்பா கர்ப்பமாக உள்ளார். கணவன் மனைவி இருவரும் ஐடி நிறுவனத்தை வேலை பார்த்து வந்தனர். திருமணத்தின் போது ஷில்பாவின் பெற்றோர் வரதட்சணையாக 50 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளனர்.

சில நாட்களில் பிரவீன் ஐடி வேலையை விட்டு பானிபூரி உணவக தொழில் தொடங்கி மேலும் பணம் வேண்டும் என ஷில்பாவிடம் தகராறு செய்துள்ளார். இதனால் ஷில்பாவின் குடும்பத்தினர் பத்து லட்ச ரூபாயை பிரவீனுக்கு கொடுத்தனர். தற்போது மீண்டும் கூடுதல் வரதட்சனை கேட்டு பிரவீன், அவரது குடும்பத்தினரும் ஷில்பாவை கொடுமைப்படுத்தியுள்ளனர்.

இதனால் கோபத்தில் ஷில்பா தனது பெற்றவர் வீட்டிற்கு சென்று விட்டார். அங்கு சென்று பிரவீனின் குடும்பத்தினர் சமாதானப்படுத்தி ஷில்பாவை அழைத்து வந்து மீண்டும் தொந்தரவு அளித்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் நேற்று ஷில்பா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் பிரவீன், அவரது தாய் சாந்தா, தங்கை பிரியா ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.