பாலிவுட் திரையுலகின் பிரபல முன்னணி நடிகரான கோவிந்தா, அடிக்கடி பல்வேறு நடிகைகளுடன் இணைத்து வதந்திகளில் பேசப்பட்டு வருவது வழக்கம். தற்போது மனைவியைப் பிரிந்து வாழும் 62 வயதான கோவிந்தா, 56 வயது நடிகை கோமல் ராணியுடன் நெருக்கமாகப் பழகி வருகிறார். இவர்களின் இந்த நட்பு பாலிவுட் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் பலதரப்பட்ட விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே கோவிந்தாவும் நடிகை கோமல் ராணியும் விரைவில் திருமணம் செய்து கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகச் செய்திகள் பரவி வருகின்றன. இந்தத் தகவல்கள் சினிமா உலகிலும் சமூக வலைதளங்களிலும் வேகமாகப் பரவி, ரசிகர்கள் மத்தியில் பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.

இந்தச் சூழலில், இவர்களின் திருமண முயற்சியைத் தடுக்கும் நோக்கில் கோவிந்தாவின் மனைவி சுனிதா அஹூஜா ஒரு அதிரடி நடவடிக்கையைக் கையில் எடுத்துள்ளார். கணவரின் இந்த முடிவுக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் அவர் ஒரு சட்டப்பூர்வமான நகர்வை மேற்கொண்டுள்ளார்.

அதாவது, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கோவிந்தாவிடமிருந்து பிரிவதற்காகச் சுனிதா அஹூஜா நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த விவாகரத்து மனுவை தற்போது திடீரெனத் திரும்பப் பெற்றுள்ளார். விவாகரத்து கிடைக்காத பட்சத்தில் கோவிந்தாவால் மீண்டும் சட்டப்பூர்வமாகச் திருமணம் செய்ய முடியாது என்பதால் இந்த முடிவை அவர் எடுத்துள்ளார்.

சுனிதா தனது விவாகரத்து மனுவை வாபஸ் பெற்றுள்ளதால், இனி சட்டத்தை மீறி கோவிந்தா ஏதேனும் நடவடிக்கைகளில் ஈடுபட்டால் கடுமையான சட்ட ரீதியான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று அவரது வழக்கறிஞர்கள் எச்சரித்துள்ளனர். மனைவியின் இந்த அதிரடிச் ‘செக்’ காரணமாக அடுத்து கோவிந்தா என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.