தமிழகச் சட்டமன்றத்தில் பாமக தரப்பில் சௌமியா அன்புமணி கொண்டு வந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் போது, உலகையே அச்சுறுத்தி வரும் “சூப்பர் எல் நினோ” காலநிலை மாற்றத்தினால் தமிழகத்தில் கடுமையான வறட்சி ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரித்த விவகாரம் தற்பொழுது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
இதற்கு தவெக அரசு நிர்வாகத்தின் சார்பாகப் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், எல் நினோ காலங்களில் மழைப்பொழிவு குறையும் என்பதை விவசாயிகள் நன்கு அறிவார்கள் என்றும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் அவர்களுக்குத்செய்யவும் இந்த அரசு எப்போதும் உறுதியாகத் துணையாக நிற்கும் என்றும் அசைக்க முடியாத உறுதிமொழியை அளித்தார்.
View this post on Instagram
“>
பசிபிக் பெருங்கடலில் மேற்பரப்பு வெப்பநிலை வழக்கத்தை விட 2.6 டிகிரி செல்சியஸ் வரை மிக உச்சகட்டமாக அதிகரிப்பதே இந்தச் “சூப்பர் எல் நினோ” பினாமினன் என்றும், உலக வானிலை அமைப்பு மற்றும் நாசா போன்ற சர்வதேச அமைப்புகள் சென்டினல்-6 செயற்கைக்கோள் தரவுகளின் அடிப்படையில் இந்த ஆண்டின் பிற்பகுதியில் கடுமையான காலநிலை மாற்றம் ஏற்படும் என எச்சரித்துள்ள விபரங்களும் இந்தச் சட்டமன்ற விவாதத்தின் மூலம் வெளியாகியுள்ளது.
