2004-ஆம் வருடம் வெளியாகிய செல்லமே திரைப்படத்தின் வாயிலாக திரையுலகிற்கு நாயகனாக அறிமுகமானவர் விஷால். இதையடுத்து வெளியாகிய திமிரு, சத்யம், தீராத விளையாட்டு பிள்ளை, அவன் இவன், ஆம்பள், இரும்புத் திரை ஆகிய பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இவரது நடிப்பில் அண்மையில் லத்தி படம் வெளியாகியது. இப்போது மார்க் ஆண்டனி, துப்பறிவாளன்-2 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

அதோடு  விஷால் பல சமூகபணிகளையும் செய்து வருகிறார். இந்த நிலையில் விஷால் சத்யபாமா பல்கலையில் நடந்த “சென்னையில் ஒரு கிராம விழா” நிகழ்ச்சியை துவங்கி வைத்தார். அதன்பின் விஷால் பேசியதாவது “விவசாயிகளுக்காக நான் எப்போதும் உறுதுணையாக இருப்பேன்.

சென்னையில் ஒரு கிராமம் விழா நிழச்சியில் வரக்கூடிய வருவாய் அனைத்தும் நலியுற்ற விவசாய குடும்பங்களுக்கு வழங்கப்படும் என்பதாலேயே நான் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றேன். விவசாயி சேற்றில் கால் வைத்தால் தான் நாம் அனைவரும் சோற்றில் கைவைக்க முடியும் என்பது உண்மையானது. என் திரைப்படங்களுக்கு திரையரங்குகளில் விற்பனையாகும் டிக்கட்டுகளில் ஒரு டிக்கட்டுக்கு ஒரு ரூபாய் வீதம் விவசாய குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கி வருகிறேன் என்று அவர் பேசினார்.