தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இடம் பிடிக்கும் அளவிற்கு திகழ்ந்த நடிகர் தான் சரத் பாபு. இவர் தெலுங்கில் 1973 ஆம் ஆண்டு ராம ராஜ்ஜியம் என்ற திரைப்படம் மூலம் நடிகராக தனது திரை பயணத்தை தொடங்கினார். அதன் பிறகு 1977 ஆம் ஆண்டு பட்டிய பிரவேசம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து தற்போது வரை இவர் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் உடல் நலக்குறைவால் 71 வயதாகும் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு அவர் உடல்நிலை குறித்து தவறான தகவல் பரவிய நிலையில் அவரின் சகோதரி விளக்கம் கொடுத்தார். இந்நிலையில் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில், சரத்பாபுவுக்கு சேர்க்கை சுவாச கருவிகள் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. அதே நேரம் உடல்நிலை சீராகவும் உள்ளது. வதந்திகளை நம்ப வேண்டாம் என்று மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.