தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் அல்டிமேட் ஸ்டார் தல அஜித். இவர் தற்போது இந்தியா முழுவதும் தன்னுடைய பைக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நடிகர் அஜித் படங்களில் பைக் ஓட்டும் போதும் சரி தற்போது சுற்றுப்பயணம் சென்றுள்ள போதும் சரி எப்போதும் தலைக்கவசம் அணிந்திருப்பார். நடிகர் அஜித் ஹெல்மெட் அணிந்திருப்பதால் அவருடைய ரசிகர்களும் அதை பார்த்து ஹெல்மெட் அணிவார்கள் என்பது ஒரு நம்பிக்கை.

அந்த நம்பிக்கையை உண்மையாகும் விதமாக தற்போது காரைக்குடி துணை எஸ்.பி டாக்டர் ஆர். ஸ்டாலின் ஐபிஎஸ் அவர்கள் தன்னுடைய twitter பக்கத்தில் நடிகர் அஜித் பைக் ஓட்டும்போது ஹெல்மெட் அணிந்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து தலைக்கவசம் உயிர்க்கவசம் என்ற வாசகத்தை பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில், ஐபிஎஸ் அதிகாரியின் twitter பதிவுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது. மேலும் போலீஸ் அதிகாரி ஒருவர் நடிகர் அஜித்தின் புகைப்படத்தை பகிர்ந்து ஹெல்மெட் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தியது தல ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.