விளையாட்டு வீரர்களுக்கு இந்திய அரசு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் 291 பணியிடங்களை நிரப்ப வருமான வரித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மும்பையில் உள்ள தலைமை வருமான வரி ஆணையர் அலுவலகம் வருமான வரி ஆய்வாளர், ஸ்டேனோகிராபர் கிரேடு -11, மல்டி டாஸ்கிங் ஸ்டாப் மற்றும் இதர பணிகளுக்கு திறமையான விளையாட்டு வீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ incometaxmumbai.gov.in  இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.