நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கீழ்வேளூர் அருகே வலிவலம் ஊராட்சி காரைக்குடி பகுதியைச் சேர்ந்த இளையராஜா என்பவரின் மகன் கவிப்ரியன்(13). இவர் வலிவலத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் கவிப்ரியன் நேற்று முன்தினம் மாலை பள்ளி விளையாட்டு வகுப்பு நேரத்தில் சக மாணவர்களோடு விளையாட்டு திடலில் ஓடிய போது திடீரென மயங்கி விழுந்தான்.

உடனடியாக அவனை மீட்ட ஆசிரியர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவன் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விளையாடிக் கொண்டிருந்த போது மாணவன் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.