மும்பையில் உள்ள பட்லி பாடா பகுதியில் ஒரு ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு ஒரு விருந்து நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் அதில் கலந்து கொள்வதற்காக ஷரவன் லீகா (37) என்பவர் தன்னுடைய நண்பர் விகாஸ் மேனன் (32) என்பவருடன் சென்றார். இந்த நிகழ்ச்சியின் போது திடீரென இவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் தகராறு முற்றவே கோபத்தில் விகாஸ் மேனன் தன்னுடைய நண்பனின் காதை கடித்தார்.
இதில் அவர் வலி தாங்க முடியாமல் கதறிய நிலையில் அதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து அழுத்தமாக கடித்தார். இதில் காது துண்டான நிலையில் அந்தக் காதை அவர் மென்று விழுங்கிவிட்டார். இதை பார்த்து அங்கிருந்தவர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அங்கிருந்தவர்கள் லீகாவாவை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வரும் நிலையில் விகாஷ் மேலனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
