இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரல் ஆகிறது. அதிலும் சில வீடியோக்கள் ரசிக்க வைப்பதாகவும் மகிழ்ச்சியை தருவதாகவும் வியக்க வைப்பதாகவும் இருக்கும். அந்த வகையில் ஒரு குழந்தை வயதான தாத்தாவுடன் விளையாடும் அழகிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் 96 வயது தாத்தா தன்னுடைய 2 வயது பேத்தி நவ்யாவுடன் மகிழ்ச்சியாக விளையாடுகிறார். அந்த குழந்தை விலங்கு பொம்மைகளை வைத்து தாத்தாவுடன் விளையாடுகிறது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் உண்மையான பாசத்துக்கு வயது தெரியாது என்ற தலைப்புடன் வைரலாகி வருகிறது.மேலும் இந்த வீடியோவுக்கு லைக் குவிந்து வரும் நிலையில் பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
View this post on Instagram
