கர்நாடக முதலமைச்சர் பதவியிலிருந்து தான் விலக உள்ளதாகச் சித்தராமையா அதிரடியாக அறிவித்துள்ளார். துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களுக்கு இன்று காலைத் தனது இல்லத்தில் விருந்தளித்தபோது அவர் இந்த முடிவை வெளியிட்டுள்ளார்.
மேலும், அடுத்த முதலமைச்சராக யாரைத் தேர்வு செய்தாலும் அதற்குத் தான் முழு ஒத்துழைப்பு அளிப்பேன் என்றும் சித்தராமையா தெரிவித்துள்ளார்; இந்தச் சூழ்நிலையில், தற்போதைய துணை முதலமைச்சராக இருக்கும் டி.கே.சிவக்குமார் கர்நாடகாவின் புதிய முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
