சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், இளம்பெண் ஒருவர் சிவப்பு நிறப் புடவை மற்றும் ஹை ஹீல்ஸ் அணிந்து கொண்டு, ஹிருத்திக் ரோஷன் நடித்த ‘தூம் 2’ படத்தின் புகழ்பெற்ற ‘தூம் மச்சாலே’ பாடலுக்கு மிகவும் கடினமான நடன அசைவுகளை லாவகமாக ஆடி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

மேலும் ஆய்லி கியா என்ற அந்தப் பெண், ஒரு திருமண விழாவிற்கு விருந்தினராகச் சென்றபோது அங்கிருந்தவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இந்தப் பாடலுக்கு நடனமாடியுள்ளார். புடவை அணிந்து கொண்டு இவ்வளவு வேகமான மற்றும் சிக்கலான நடன அடவுகளை ஆடுவது மிகவும் கடினம் என்றாலும், அவர் தனது அபாரமான திறமையால் அதை மிக எளிதாகச் செய்து காட்டியது இணையவாசிகளை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Ayli Ghiya (@aylighiya)

“>

இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட சில நாட்களிலேயே லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று வைரலாகியுள்ளது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும், “ஹிருத்திக் ரோஷனே இதைப் பார்த்தால் பெருமைப்படுவார்” என்றும், “பெண் வடிவில் ஒரு ஹிருத்திக் ரோஷன்” என்றும் பாராட்டி வருகின்றனர்.

இது சாதாரணமாக புடவையில் நடப்பதே சவாலான காரியம் என்னும்போது, ஹை ஹீல்ஸ் காலணிகளுடன் சமநிலை தவறாமல் அவர் ஆடிய விதம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங்கில் உள்ளது.