சீனாவின் ‘இன்ஜின் ஏஐ’ நிறுவனம் உருவாக்கியுள்ள ‘டி800’ என்ற ஹியூமனாய்டு ரோபோ, தனது நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியையே உதைத்து கீழே தள்ளும் வீடியோ இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக இந்த ரோபோ குத்துச்சண்டை மற்றும் உதைக்கும் பயிற்சியில் ஈடுபடும் வீடியோக்களை நிறுவனம் வெளியிட்டபோது, அவை வெறும் கிராபிக்ஸ் வேலைப்பாடுகள் என்று சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்தனர்.

இந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவும், ரோபோவின் நிஜமான வலிமையை நிரூபிக்கவும், அந்நிறுவனத்தின் நிறுவனரும் சிஇஓ-வுமான ஜாவோ டோங்யாங் பாதுகாப்பு உடைகளை அணிந்து கொண்டு நேடியாக களமிறங்கினார். அப்போது அந்த ரோபோ கொடுத்த பலமான உதையில் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார், இது ஏஐ ரோபோக்களின் அபரிமிதமான சக்தியை உலகிற்கு பறைசாற்றியுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by South China Morning Post (@scmpnews)

“>

மேலும் சுமார் 5.6 அடி உயரமும் 75 கிலோ எடையும் கொண்ட இந்த டி800 ரோபோ, வானூர்திகளில் பயன்படுத்தப்படும் உயர்தர அலுமினியத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இது மனிதர்களைப் போலவே மிக இலகுவாகவும் அதே சமயம் வலிமையாகவும் செயல்படும் திறன் கொண்டது. இதில் பொருத்தப்பட்டுள்ள மேம்பட்ட குளிரூட்டும் அமைப்பு அதிக வெப்பமடையாமல் தொடர்ந்து 4 மணி நேரம் கடினமான வேலைகளைச் செய்ய இதற்கு உதவுகிறது.

இந்த மனிதர்களின் மூட்டுகளைப் போன்றே வடிவமைக்கப்பட்டுள்ள இதன் பாகங்கள், தடையற்ற அசைவுகளை வழங்குகின்றன. தொழில்நுட்ப உலகில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ள இந்த வீடியோ, எதிர்காலத்தில் மனிதர்களுக்கு இணையாக ரோபோக்கள் எவ்வளவு வலிமை வாய்ந்ததாக மாறும் என்பதற்கு ஒரு சிறு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.