உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற உள்ள 2026-ஆம் ஆண்டு மாக் மேளா திருவிழாவிற்கு முன்னதாக, ‘பாஸ்மதி’ என்ற இளம்பெண்ணின் வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. இந்த விழாவில் மாலைகள் மற்றும் வேப்பங்குச்சிகளை விற்பனை செய்து வரும் பாஸ்மதியின் வசீகரமான கண்களும், கள்ளங்கபாடற்ற முகபாவனைகளும் லட்சக்கணக்கான இணையவாசிகளைக் கவர்ந்துள்ளன.
மேலும் இவரது இயல்பான அழகைக் கண்டு வியந்த மக்கள், இவரை ‘மாக் மேளாவின் மோனாலிசா’ என்று புகழ்ந்து வருகின்றனர். இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோக்கள் வைரலாகி வரும் நிலையில், பாஸ்மதியின் கண்கள் ஒருவித மாயாஜாலத்தைக் கொண்டிருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram
“>
எந்தவித ஒப்பனையும் இன்றி, எளிமையான தோற்றத்தில் இருக்கும் இவரை, கடந்த காலங்களில் வைரலான ‘மகா கும்பமேளா மோனாலிசா’ பெண்ணுடன் ஒப்பிட்டுப் பேசி வருகின்றனர். பிரயாக்ராஜ் சங்கம கரையில் ஜனவரி 3-ம் தேதி தொடங்கும் இந்த மாக் மேளா திருவிழா, பிப்ரவரி 15 மகா சிவராத்திரி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
