சமூக வலைதளங்களில் வைரலாக வேண்டும் என்ற ஆர்வத்தில் இளைஞர்கள் பலரும் ஆபத்தான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், தற்போது இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், வாலிபர் ஒருவர் ஓடிக்கொண்டிருக்கும் ஆட்டோவிலிருந்து கீழே இறங்கி ‘ரீல்ஸ்’ செய்து அனைவரையும் அதிர வைத்துள்ளார்.
ஒரு மைதானத்தில் ஆட்டோ தானாக ஓடிக்கொண்டிருக்க, டிரைவர் இருக்கையில் அமர்ந்திருந்த அந்த நபர் திடீரென கீழே இறங்கி பாலிவுட் பாடலுக்கு நடனமாடி தனது திறமையைக் காட்டுகிறார். ஆட்டோ எங்கே மோதும் என்ற கவலையே இல்லாமல் அவர் செய்த இந்தச் செயல் பார்ப்பவர்களை வியப்பிலும் சிரிப்பிலும் ஆழ்த்தியுள்ளது.
View this post on Instagram
“>
இந்த இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோவை இதுவரை 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், ஆட்டோவை பிடிப்பா, அது பாட்டுக்கு பாகிஸ்தானுக்குப் போய்விடப் போகிறது” என்றும் கூறியுள்ளனர்.
ஆட்டோ தவணை கட்டி முடித்த மகிழ்ச்சியில் இப்படி ஆடுகிறார் போல என்றும் நகைச்சுவையாகக் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். ஆக்கப்பூர்வமாக எதையாவது செய்ய நினைக்கும் இளைஞர்கள், இதுபோன்ற ஆபத்தான ஸ்டண்ட்களைத் தவிர்த்து பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதே பலரின் சமூக அக்கறையாக உள்ளது.
