விருச்சிக ராசி அன்பர்களே,

இன்று மிகவும் கவனமாக செயல்பட வேண்டி இருக்கும். குழப்பங்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம். மனதை போட்டு குழப்பிக்கொள்ள வேண்டாம். மனம் போன போக்கில் சென்று மகிழ்ச்சி அடையும் சூழல் உள்ளது. விட்டுக் கொடுத்து பேசுவது நல்லது. எதிலும் அவசரப்பட வேண்டாம். நண்பர்களால் சிறிய தொல்லைகளை அனுபவிப்பீர்கள். பிரச்சனைகளை துல்லியமாக கையாள வேண்டும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.

உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமாக செயல்படுங்கள். தொழில் பயணம் வெற்றியைக் கொடுக்கும். வீண் அலைச்சல் ஏற்படலாம். மனதை போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம். பழைய பாக்கிகள் வசூல் ஆவதில் தாமதம் ஏற்படும். நினைத்த வாழ்க்கை கண்டிப்பாக அமையும். மனதிற்குள் ஒருவித சந்தோசம் ஏற்படும். பேச்சில் மட்டும் நிதானம் கொள்ள வேண்டும். பெண்கள் அக்கம் பக்கத்தில் உரையாடும் போது கவனமாக இருங்கள்.

சந்திராஷ்டமம் முடியும் வரை பொறுமையாக இருங்கள். மனக்கவலை அவ்வப்போது வந்து செல்லும். விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. இன்று மாணவர்கள் குழப்பமான மனநிலையில் காணப்படுவீர்கள். என்ன படிக்க வேண்டும் என்பதே பெரிய குழப்பமாக இருக்கும். சக நண்பர்களுடன் விளையாடும் போது கவனமாக இருங்கள். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிஷ்ட எண்: 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்