தனுசு ராசி அன்பர்களே,

இன்று முயற்சிகள் மூலம் முன்னேறி செல்ல முடியும். திட்டமிட்டு காரியங்களில் ஈடுபட்டால் திட்டமிட்ட படியே வெற்றியை காணலாம். பூர்வீக சொத்துக்கள் மூலம் ஏற்பட்ட பிரச்சனைகள் விலகிச் செல்லும். சமுதாய பொறுப்புகள் தேடி வரும். பொது பிரச்சனைகளை கையாளும் போது கவனமாக இருங்கள். தித்திக்கும் செய்தி வீடு தேடி வரும். வருமானம் திருப்தியை கொடுக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். எடுத்த காரியம் உடனே முடியவில்லை என்று வருத்தம் ஏற்படலாம். நட்பு வட்டம் விரிவடையும். நல்ல விஷயங்கள் கண்டிப்பாக நடக்கும்.

மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திறமைகள் வெளிப்படும் சூழல் உள்ளது. திட்டமிட்டபடி எல்லாம் சிறப்பாக நடக்கும். இந்த நாள் உணர்ச்சிவசப்பட்டு பேசுவீர்கள். யார் மனதையும் புண்படுத்த வேண்டாம். பொறுமையான செயல்பாடுகள் வெற்றியை கொடுக்கும். இன்று பெண்களுக்கு காலையில் குழப்பங்கள் இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. பெண்கள் எதைப் பற்றியும் குழப்பிக் கொள்ள வேண்டாம். எல்லாம் நல்லதாகவே நடக்கும்.

கருத்துக்களை பரிமாறும் போது கவனமாக இருங்கள். இன்று மாணவர்கள் விளையாட்டு துறையில் சாதிக்க முடியும். முயற்சிகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்தி கல்வி மீது முழு அக்கறை ஏற்படுத்திக் கொள்ள முடியும். பெற்றோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள் நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: ஐந்து மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்