நெரிசல் மிகுந்த பேருந்தில் தீபக் என்பவர் தன்னைத் தவறாகத் தொட்டதாக ஷிம்ஜிதா முஸ்தபா என்ற பெண் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இந்த வீடியோ மிகவேகமாகப் பரவியதால் ஏற்பட்ட அவமானத்தைத் தாங்க முடியாமல், 41 வயதான தீபக் தற்கொலை செய்து கொண்டார். ஆனால், சமூக வலைதளங்களில் ‘வியூஸ்’ பெறுவதற்காகவே அந்தப் பெண் திட்டமிட்டு இந்த வீடியோவை எடுத்ததாகவும், தீபக் எந்தத் தவறும் செய்யாத அப்பாவி என்றும் அவரது குடும்பத்தினர் கண்ணீருடன் குற்றம் சாட்டி வருகின்றனர்.

​எந்தவொரு விசாரணையும் இன்றி இணையதளத்தில் ஒருவரை குற்றவாளியாகச் சித்தரிப்பது எவ்வளவு பெரிய விபரீதத்தை ஏற்படுத்தும் என்பதற்கு தீபக்கின் மரணமே சாட்சி. ஒரு வீடியோவின் உண்மைத்தன்மையை ஆராயாமல் ஒருவரைத் தூற்றுவது, ஒரு மனிதனின் வாழ்க்கையையே அழித்துவிடும் என்பதை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது. ஒரு உயிர் போன பிறகு கிடைக்கும் நீதி எதற்கும் ஈடாகாது என்று சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.