அமெரிக்காவில் உள்ள நேவாடா மாகாணத்தில் ரெனோ விமான கண்காட்சி நடைபெற்றது. இதில் பல விமானங்கள் சாகசத்தில் ஈடுபட்டது. இந்நிலையில் இறுதிப் போட்டியில் நடந்த சாகசத்தை முடித்துவிட்டு விமானங்கள் தரையிறங்கிய போது இரண்டு விமானங்கள் எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது.

இதில் விமானங்கள் நொறுங்கி அதில் இருந்த இரண்டு விமானிகளும் பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு படையினர் உயிரிழந்த இருவரது சடலங்களை மீட்டு வந்தனர். ஆனால் இதுவரை விமானிகள் இருவரது விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை.