அமெரிக்காவின் போர் விமானம் காணாமல் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் விமானப்படையில் அதிநவீன போர் விமானங்கள் பல இடம்பெற்றுள்ளன அதில் f35 ரக விமானம் தென் கரோலினா கடலோரப் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மாயமாகியுள்ளது விமானத்திற்கும் கட்டுப்பாட்டு அறைக்கும் இருந்த தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில் விமானம் எங்கே சென்றது என அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

விமானத்திலிருந்து விமானி பாராசூட் மூலமாக கீழே குதித்ததாக தகவல் தெரியவந்துள்ளது ஆனால் 80 மில்லியன் மதிப்பிலான அதிநவீன போர் விமானம் மாயமானது அமெரிக்க அரசிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தொடர்ந்து மாயமான விமானத்தை தேடும் பணியும் தீவிர படுத்தப்பட்டுள்ளது.