இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதில் சில வீடியோக்கள் சிரிக்க வைக்கும் வகையிலும் சில வீடியோக்கள் வியப்பை ஏற்படுத்தும் வகையிலும் இருக்கும். பிறந்தநாள் என்பது அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாடும் ஒரு நாளாகும். இந்த நாளில் கேக் வெட்டி கொண்டாடுவது தான் வழக்கம்.

ஆனால் தற்போது வெளியாக்கியுள்ள வீடியோவில் நபர் ஒருவர் அவருடைய பிறந்தநாள் அன்று கேக் வெட்டி தனது உறவுகளுடன் அந்த தினத்தை கொண்டாடாமல் பப்பாளி வெட்டி கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். ஆனால் இவர் வித்தியாசமான முறையில் இப்படி கொண்டாடுவதற்கான காரணம் தெரியவில்லை.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Kavitha Renikuntla இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@dr.kavithaajay)