கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பவர்கள் 20-20-20 பயிற்சியை பழக வேண்டும். அதாவது 20 நிமிடங்களுக்கு ஒரு முறை 20 அடி தொலைவில் உள்ள பொருளை 20 வினாடிகள் பார்த்து கண்ணை இலகுவாக்குவது தான் பயிற்சி. அவ்வப்போது கண்களை கழுவுவதும் அவற்றுக்கு புத்துணர்ச்சியை தரும்.. மின்னணு திரைகளின் வெளிச்சத்தை முடிந்த அளவு குறைத்து வைக்கலாம். நள்ளிரவு கடந்து கம்ப்யூட்டரில் வேலை செய்வதை முடிந்த அளவு தவிர்ப்பது உடலுக்கு நல்லது.