மதுரை மாவட்டத்திலுள்ள காளவாசல், திருநகர், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்கிறது. இதுவரை வெப்பமும் புழுக்கமும் நீடித்தது. ஆனால் மழை காரணமாக வழக்கத்துக்கு மாறாக குளிர் நிலவியது.

குறிப்பாக மாட்டுத்தாவணி, ஒத்தக்கடை, கே.புதூர், பெரியார் நிலையம், ஆனையூர் போன்ற நகரின் பிற பகுதிகளில் மழை தூறல் நிற்காமல் பெய்து கொண்டிருக்கிறது. வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சுழல் நிலவியதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.