ஜப்பானைச் சேர்ந்த ஜோனோுச்சி என்ற இளைஞர், தனது முகத்தில் உள்ள விசித்திரமான அமைப்பால் தற்போது உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளார். டிக்டாக்கில் 4 லட்சம் பின்தொடர்பவர்கள், யூடியூப்பில் 3.47 லட்சம் சந்தாதாரர்கள் மற்றும் இன்ஸ்டாகிராமில் 55,000க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்களுடன், அவர் பகிரும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
தனது நீளமான தாடை மூலம் “Longest Chinned YouTuber” என்ற பெயரையும் இவர் பெற்றுள்ளார். சிறுவயதில் அவரது தாடை அமைப்பு சாதாரணமாக இருந்ததாகக் கூறப்படுகின்றது. ஆனால் 10 வயதுக்குப் பிறகு அதிகமாக வளரத் தொடங்கியதால், பள்ளியில் ‘Chin’ எனவே அழைக்கப்பட்டுள்ளார்.
View this post on Instagram
மருத்துவ பரிசோதனையில் “Jaw Protrusion” எனும் நிலை கண்டறியப்பட்டது. அதனுடன், மரபணு பிரச்சனை, அதிக கால்சியம் எடுத்தல் போன்ற காரணங்கள் முற்றிலும் நிராகரிக்கப்பட்டுள்ளன. இது மருத்துவர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஒரு மருந்தாளர் x-ray பார்த்ததும், “இதுபோன்ற தாடையை நான் பார்த்ததே இல்லை!” என்று பகிரங்கமாக கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஒரு நேரத்தில் தனது தாடை அமைப்பால் காதலில் தோல்வி கண்ட ஜோனோுச்சி, தற்போது தன்னம்பிக்கையுடன் அதனை ஏற்றுக்கொண்டு நகைச்சுவை கலந்த வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு “நான் 168cm தான்; யாராவது இன்னும் 2cm குடுத்துட்டாங்கன்னா ரொம்ப சந்தோஷமா இருப்பேன்!” என்றும் நகைச்சுவையுடன் கூறியுள்ளார். சமூக வலைதளங்களில் அவரது விதவிதமான பாஷை மற்றும் நடத்தை, பலருக்கு பொழுதுபோக்காகவும் வியப்பாகவும் மாறியுள்ளது.
