உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இந்நிலையில் அந்த போரை நிறுத்தக் கூறி ரஷ்யாவுக்கு அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் 50 நாட்கள் கெடு விதித்துள்ளார். இந்நிலையில் ரஷ்யா போரை தொடர்ந்தால் அந்நாட்டின் மீது 100% கடுமையான பொருளாதார தடைகளை விதிப்பேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த மிரட்டலுக்கு ரஷ்யா செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் பதிலளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது தங்கள் நாடு யாருடைய அச்சுறுத்தல்களுக்கும் அடிப்படையாது என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது, அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறிய கருத்துக்கள் மிகவும் தீவிரமானவை.

குறிப்பாக சில கருத்துக்கள் நமது அதிபரை தனிப்பட்ட முறையில் குறிப்பிடுவதாக தெரிகிறது. யாருடைய இறுதி எச்சரிக்கைகளையும் நாங்கள் பொருட்படுத்தவில்லை. வாஷிங்டனின் கருத்துக்களை பகுப்பாய்வு செய்ய நாங்கள் நேரம் ஒதுக்குவோம். அதிபர் புதின் அவசியம் என்று கருதினால் நிச்சயமாக பதில் அளிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.