இணையத்தில் தற்போது ஒரு வீடியோ பரவலாகப் பகிரப்பட்டு, மில்லியன் கணக்கான நெட்டிசன்களின் இதயங்களை வென்று வருகிறது. இந்த வீடியோவில், மனிதனும் ஒரு குரங்கும் இடையே ஏற்பட்டுள்ள அற்புதமான நட்பு பிணைப்பு காணப்படுகிறது. நெட்டிசன்கள் இதைப் பார்த்து “இது சாதாரண நட்பு இல்ல, உண்மையான பாசம்!” என்று சொல்கிறார்கள்.

இந்த வீடியோவில், ஒருவர் தனது மொபைலில் எதையோ தீவிரமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார். அருகில் இருக்கும் குரங்கு, அவரது காதில் கிசுகிசுத்ததுபோல நடந்து கொள்கிறது. அதற்கு பதிலாக அந்த நபரும் குரங்கின் காதில் ஏதோ சொல்லுகிறார்.

பின்னர் அவர் தனது மொபைலை குரங்கிடம் கொடுக்கிறார். குரங்கு, “இப்போ மொபைல் என்னுடையது” என்ற மாதிரி அதை ஆர்வத்துடன் பார்க்க ஆரம்பிக்கிறது. இந்த சந்தோஷ தருணம், பாசமும் நம்பிக்கையும் நிரம்பிய சிறந்த மனித-விலங்கு நட்பை வெளிப்படுத்துகிறது.

இந்த வீடியோ ஏப்ரல் 28ஆம் தேதி @mannypostsvids என்ற இன்ஸ்டாகிராம் ஹேண்டிலில் பகிரப்பட்டு, தற்போது 1 மில்லியனுக்கும் அதிகமான லைக்குகளை பெற்றிருக்கிறது. “எனக்கும் இப்படி ஒரு குரங்கு நண்பன் வேணும்”, “குரங்கு கூட இப்போ ஸ்மார்ட் போன் வியாதி பிடிச்சுக்குது” போன்ற கருத்துகளால் கமெண்ட் பகுதி களைகட்டுகிறது.

மனிதனுக்கும் விலங்குக்கும் இடையிலான உணர்ச்சி பிணைப்பு எப்போதும் சுவாரசியமானதுதான். ஆனால் இந்த வீடியோ அதை இன்னும் அழகாகவும் ரசிக்க வைக்கும் விதமாகவும் எடுத்துச் செல்கிறது. இதை பார்த்த மக்கள் அனைவரும் மனம் உருகி “அந்த மனிதனும் குரங்கும் உண்மையான நண்பர்கள்” என்று கருத்து தெரிவிக்கின்றனர்.