அமெரிக்க நாட்டின் வடகிழக்கு பகுதியான வாஷிங்டனில் பருவமழை தொடர்ச்சியாக பெய்து வருகிறது. இதனால் நியூயார்க், நியூஜெர்சி உள்ளிட்ட இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த கனமழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் வாஷிங்டன் பகுதியில் உள்ள நெடுஞ்சாலைகளும், சுரங்கப்பாதைகளும் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் அங்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருக்கும் மக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்த்து வீடுகளுக்குள்ளே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தொடர் கனமழையின் காரணமாக நியூயார்க்-ல் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்திற்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் பயணிகள் இருகையில் ஏறி நின்று பயணம் செய்தனர். இது தொடர்பான காட்சிகள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
