சமூக வலைதளங்களில் தற்போதைய வைரல் வீடியோ ஒன்று எல்லோரையும் ஆச்சரியப்படவைத்துள்ளது. பிரேசிலைச் சேர்ந்த இன்ஃப்ளுவன்சர் ஜூனியர் கால்தேடிரா என்பவர், பாம்பாக நடித்து ஜப்பானில் தெருக்களில் ஊர்ந்து சென்ற வீடியோ வைரலாகிறது.

இந்த வீடியோவில், அவர் பாம்பின் தோற்றத்தில் தோல் நிற உடை, மெய்யான பாம்பு போல் நடமாடும் அசைவுகள், மற்றும் தோலை ஒத்த ரங்கோலி பாணி உடல் ஓவியங்களுடன், சாலையில் ஊர்ந்து  செல்கிறார். இந்த வீடியோ இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

View this post on Instagram

 

A post shared by Junior Caldeirão (@juniorcaldeirao)

பாம்பாக தன்னை “அடையாளம் காண்கிறார்” என்று கூறி வீடியோவை சிலர் பகிர, பலரும் அதற்கு அதிர்ச்சி மற்றும் ஆச்சரியம் தெரிவித்து வருகின்றனர். சிலர் அவரின் தன்னம்பிக்கை மற்றும் தனித்துவமான கலைதிறமையை பாராட்டி பதிவிட்டிருந்தனர். ஒருவகையில், இது இன்ஃப்ளூயன்சர் கலைக்கான புதிய வடிவம் என சிலர் வலியுறுத்தியிருந்தனர். “அவர் உண்மையில் பாம்பாக வாழ விரும்புகிறாரா?” என்ற கேள்வியும் தற்போது சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது.

தனித்துவம் மற்றும் சாகசம் நிறைந்த இந்த வீடியோ, இணையத்தில் பலரிடமும் வியப்பையும் விவாதத்தையும் தூண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.