விடுதலை இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக  கதாபாத்திரத்தில் கேரள நடிகை இணைய போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான விடுதலை திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இதை தொடர்ந்து விடுதலை படத்திற்கான இரண்டாம் பாக படப்பிடிப்பு சமீபத்தில் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், படத்தின் இரண்டாம் பாக படப்பிடிப்பில் மேலும் சில திரையுலக நட்சத்திரங்கள் இணைய போவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில்,

அசுரன் திரைப்படத்தில் தனுஷ் அவர்களுக்கு மனைவியாக நடித்த மஞ்சு வாரியர்  அவர்கள் விடுதலை இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக  நடிக்கப் போவதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்திற்கான படப்பிடிப்பு தற்போது திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை பகுதிக்கு அருகே நடைபெற்று வருகிறது என்பது  குறிப்பிடத்தக்கது.