தங்கலான்  திரைப்படத்திற்கான பட்ஜெட் விவரங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளன. 

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியாகவுள்ள தங்கலான் திரைப்படத்திற்கான படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் அதிதீவிரமாக நடைபெற்று வருகின்றன.  படத்தை பண்டிகை நாட்களில் வெளியிட  திட்டமிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல்,

படம் தொடங்குவதற்கு முன் மிக குறைந்த அளவிலான பட்ஜெட்டில் படத்தை எடுத்து முடிப்பதற்கான திட்டமிட்டதாகவும், ஒவ்வொரு நாள் ஷூட்டிங்கின் போதும் படம் மீதான நம்பிக்கை அதிகரிக்கவே, படத்தை தரமான முறையில் மக்களுக்கு  வழங்க வேண்டும் என்பதற்காக அதிக பொருட்செலவு செய்யத் தொடங்கி அதன் பட்ஜெட் ரூ 100 கோடியை தாண்டி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த 100 கோடி பட்ஜெட் விட வசூலில் அமோக சாதனையை தங்கலான்  படைக்கும் என்ற எதிர்பார்ப்பில் பட குழு இருப்பதாக கூறப்படுகிறது.