நடிகர் சூரி நடிப்பில் டைரக்டர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான விடுதலை திரைப்படம் சென்ற மார்ச் 31ம் தேதி ரிலீஸ் ஆகி அனைத்து தரப்பு மக்களையும் ஈர்த்தது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, கவுதம் மேனன், பவானிஸ்ரீ உட்பட பல்வேறு திரைப்பிரபலங்கள் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.

அதன்பின் விடுதலை படத்தின் 2-ஆம்  பாகத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டிருக்கின்றனர். இப்போது இந்த படத்தின் மொத்த பாக்ஸ் ஆபிஸ் பற்றி தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் விடுதலை திரைப்படம் உலக அளவில் ரூ.52 கோடி வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது.