தமிழ் திரையுலகில் மாஸ் நடிகராக வலம் வருபவர்தான் நடிகர் அஜித். சென்ற ஜனவரி மாதம் இவர் நடிப்பில் வெளியாகிய துணிவு படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன்பின் இவரின் 62-வது படத்தை தடம் படத்தின் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்க உள்ளார். இந்த படம் குறித்த அப்டேட் மே மாதம் வரும் என சொல்லப்படுகிறது.

கடந்த 2002-ம் வருடம் விக்ரம் நடிப்பில் வெளியாகிய படம் ஜெமினி. இந்த படம் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்தது. இந்த படத்தை டைரக்டர் சரண் இயக்கி இருந்தார். இப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகர் அஜித் தான். எனினும் சில காரணங்களால் இந்த படத்தில் அவர் நடிக்க முடியாமல் போனது.