பிக்பாஸ் ஷோவை அடுத்து விஜய் தொலைக்காட்சியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக வந்தார் ஜிபி முத்து. இவர் சென்ற வாரம் உடல்நலக் குறைவு காரணமாக திடீரென்று ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதன் காரணமாக அவர் குக்வித் கோமாளி நிகழ்ச்சிக்கும் வரவில்லை. ஆகவே ஜிபி முத்து இனிமேல் குக்வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வருவாரா?இல்லையா? என்று ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் இப்போது ஜிபி தன் உடல்நிலை குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், சிகிச்சை முடிந்தாலும் இப்போது மாத்திரை சாப்பிட்டு கொண்டிருக்கிறேன் என அவர் கூறி உள்ளார். அதோடு இம்மாத கடைசியில் மீண்டும் ஷோ ஷூட்டிங்கில் பங்கேற்பேன் எனவும் கூறி இருக்கிறார்.