வங்கதேசத்தில் அண்மைக்காலமாக இந்துக்களைக் குறிவைத்துத் நடத்தப்படும் தாக்குதல்கள் உலகையே அதிரவைத்து வருகின்றன. அங்கு கடந்த 18 நாட்களில் மட்டும் 6 இந்துக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் ஜெஸ்ஸோர் மாவட்டத்தில் ராணா பிரதாப் என்ற இந்து தொழிலதிபர் சுட்டுக்கொல்லப்பட்ட அதிர்ச்சி விலகும் முன்பே, நர்சிங்கடி மாவட்டத்தில் சரத் சக்ரவர்த்தி மணி (40) என்ற மளிகைக்கடை உரிமையாளர் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளார்.
தென் கொரியாவில் பணியாற்றிவிட்டு தாயகம் திரும்பிய இவர், தனது கடையில் இருந்தபோது மர்ம நபர்களால் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு உயிரிழந்தார்.
கடந்த டிசம்பர் 18-ல் தீபு சந்திர தாஸ் கொல்லப்பட்டதில் தொடங்கி, இன்று சரத் சக்ரவர்த்தி வரை 18 நாட்களில் மட்டும் 6 இந்துக்கள் அங்குள்ள மதவாத கும்பல்களால் பலியாகியுள்ளனர்.
வங்கதேச இடைக்கால அரசின் கீழ் சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு இல்லை என்ற குற்றச்சாட்டு வலுத்துள்ள நிலையில், இந்திய வெளியுறவுத் துறையும் தனது கடும் கவலைகளைப் பதிவு செய்துள்ளது.
