தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான சிபிஐ விசாரணைக்கு ஆஜராக இன்று சென்னை விமான நிலையத்திலிருந்து டெல்லிக்குப் புறப்பட்டார்.

அப்போது பாதுகாப்பு சோதனையின்போது, விஜய்யின் பையில் ‘கத்தரிக்கோல்’ இருந்ததை மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்தனர்.

விமானப் பாதுகாப்பு விதிமுறைகளின்படி கூர்மையான ஆயுதங்களுக்குத் தடை உள்ளதால், விஜய்யின் பயணம் தற்காலிகமாகத் தடுத்து நிறுத்தப்பட்டது. இதனால் சுமார் 20 நிமிடங்கள் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அவருடன் நிர்வாகிகள் சிடிஆர் நிர்மல்குமார், ஜெகதீஷ் உள்ளிட்டோர் இருந்த நிலையில், அந்தப் பொருள் அகற்றப்பட்ட பிறகே விஜய் டெல்லி செல்ல அனுமதிக்கப்பட்டார்.

சிபிஐ விசாரணைக்காக அவர் டெல்லி செல்லும் நேரத்தில் விமான நிலையத்தில் நடந்த இந்த எதிர்பாராத சம்பவம், சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.