கோயம்புத்தூர் மாநகராட்சியில் பெண் மேயர் தனது அலுவலக அறையில் புதிய முதலமைச்சர் விஜய்யின் புகைப்படத்தை வைக்க அதிரடியாக மறுப்பு தெரிவித்துள்ள சம்பவம் கோட்டை வட்டாரத்திலும், தமிழக அரசியல் களத்திலும் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்து முதலமைச்சராக விஜய் பதவியேற்றுள்ள நிலையில், அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் தலைமை அறைகளில் வழக்கம்போல முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ புகைப்படம் வைக்கப்பட்டு வருகிறது.

ஆனால், கோவையில் உள்ள தனது மேயர் அறையில் சிஎம் விஜய்யின் படத்தை மாட்ட முடியாது என்று பெண் மேயர் பிடிவாதமாக மறுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தத் தகவல் காட்டுத்தீயாய் பரவியதைத் தொடர்ந்து, மாநகராட்சி அலுவலக வளாகத்தில் தவெக மற்றும் எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் இடையே கடுமையான வாக்குவாதமும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டு ஒட்டுமொத்த இடமுமே ரணகளமாக மாறியுள்ளது.

“மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதலமைச்சரின் படத்தை வைக்க மறுப்பது சட்டத்திற்கு எதிரானது” என்று தவெகவினர் கொதித்தெழுந்து போராட்டத்தில் இறங்கியுள்ள நிலையில், “இது எங்கள் உரிமை” என்ற பாணியில் மறுப்பு தரப்பு நிற்பதால் கோவையில் அரசியல் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.