டாஸ்மாக் மதுக்கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை விட, பாட்டில் ஒன்றுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்படுவதாகப் பொதுமக்கள் மத்தியில் தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்த சட்டவிரோத கூடுதல் கட்டண வசூல் மற்றும் முறைகேடுகளைத் தடுத்து நிறுத்த, சென்னை காவல்துறை தற்போது மிக அதிரடியான அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவின்படி, சென்னை முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் கூடுதல் பணம் வசூலிக்கப்படுகிறதா என்பதை ரகசியமாகக் கண்காணித்து, முழுமையான அறிக்கை (Report) சமர்ப்பிக்குமாறு உளவுத்துறை போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. உளவுத்துறையினர் கடைகளுக்கு நேரடியாகச் சென்று ரகசிய விசாரணை நடத்தி ரிப்போர்ட் கொடுக்க உள்ளதால், முறைகேட்டில் ஈடுபடும் டாஸ்மாக் ஊழியர்கள் மற்றும் அதற்குப் பின்னணியில் இருக்கும் அரசியல் புள்ளிகள் மீது கடுமையான ஆக்ஷன் பாயும் எனத் தெரிகிறது.
