​தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் வெளியிட்ட எக்ஸிட் போல் (Exit Poll) முடிவுகளை நடிகை வினோதினி தனது எக்ஸ் தளத்தில் கடுமையாகக் கிண்டலடித்துள்ளார். அந்த எக்ஸிட் போலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சியமைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைச் சுட்டிக்காட்டிய வினோதினி, “தமிழக முதல்வராக விஜய்யின் சிறப்பான 5 ஆண்டு கால ஆட்சியை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன்” எனத் திமிராகப் பதிவிட்டுள்ளார்.

​மேலும் தனது பதிவில், “வரும் மே 7-ம் தேதி நடைபெறவுள்ள பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக வெள்ளைச் சட்டை மற்றும் காக்கி (Beige) நிற பேண்ட்டையும் கூட ஏற்கனவே ஆர்டர் செய்துவிட்டேன்” என்று நக்கலாகக் குறிப்பிட்டுள்ளார். தவெக வெற்றியை உறுதி செய்த அந்த எக்ஸிட் போலைத் தரம் தாழ்ந்து விமர்சிக்கும் வகையில் வினோதினி பதிவிட்டுள்ளதாகக் கூறி, விஜய் ரசிகர்கள் மற்றும் தவெக தொண்டர்கள் சமூக வலைதளங்களில் அவருக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இதனால் எக்ஸ் தளம் தற்போது போர்க்களமாக மாறியுள்ளது.