தமிழகத்தில் அமையவுள்ள புதிய அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) கட்சிக்கும் இடம் ஒதுக்கப்பட உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
தவெக (தமிழக வெற்றிக் கழகம்) தலைமையிலான புதிய அமைச்சரவையில், ஐயூஎம்எல் கட்சிக்கு ஒரு அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
அண்மையில் தவெக தலைவர் விஜய், ஐயூஎம்எல் தேசியத் தலைவர் காதர் மொகிதீன் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களைச் சந்தித்துப் பேசிய புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், இந்த இலாகா ஒதுக்கீடு குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
தவெக-வின் புதிய அமைச்சரவை நாளை பதவியேற்க உள்ள சூழலில், இரண்டு எம்.எல்.ஏ-க்களைக் கொண்டுள்ள ஐயூஎம்எல் கட்சியில் யாருக்கு அமைச்சர் பதவி கிடைக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பும், அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இன்னும் சில மணி நேரங்களில் வெளியாகும் எனத் தெரிகிறது.
