கரூர் துயரச் சம்பவம் விஜய்க்கு பெரிய அளவில் மனஉளைச்சலை ஏற்படுத்தி இருக்கலாம் இருப்பினும் இது அரசியலில் தற்காலிகமான பின்னடைவாக இருக்கும் என அரசியல் விமர்சகர்கள் மதிப்பீடு செய்கிறனர்.
விஜய், பெரிய கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதை தவிர்க்கப் போவதாக நிபுணர்கள் கருதுகின்றனர். ஏனெனில், அதுவே அவருடைய புதிய அரசியல் பயணத்திற்கே எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் விஜய் நன்கு உணர்ந்துள்ளார் எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், ‘யாரும் எதிர்பார்க்காத கூட்டணி அமையும்’ என டிடிவி தினகரன் தெரிவித்திருப்பதற்குப் பின்னணியில், தளபதி விஜய்யின் தவெகவும், அமமுகவுமாக புதிய கூட்டணி உருவாகும் சாத்தியக்கூறுகள் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
விஜய் தலைமையிலான தவெக கட்சி தனித்தெழும் காலத்தில், இந்த கூட்டணி நிகழ்ந்தால், அது தமிழக அரசியலில் புதிய திருப்பமாக அமையும் என்பதே பலரின் கருத்தாகும்.
