புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நேற்று தென்காசி அருகிலுள்ள ஒரு தனியார் விடுதியில் நிருபர்களிடம் பேசியபோது கூறியதாவது: புதிய தமிழகம் கட்சியின் 7வது மாநில மாநாடு வருகிற ஜனவரி 7ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ளது. கரூரில் நடிகர் விஜய் பிரசாரம் செய்தபோது மிகச் சுருக்கமான இடத்தில் மக்கள் திரண்டு இருந்தனர். இதன் காரணமாக ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர் என்பது மிகுந்த துயரத்தை அளிக்கிறது.
நடிகர் விஜய் மக்களை சந்திக்க சரியான இடத்தை அரசு ஒதுக்கி தரவில்லை என்பதே இதற்கான முக்கிய காரணம். ஆளுங்கட்சியினர் நடிகர் விஜய்க்கு மக்களிடையேயான ஆதரவைக் கண்டு அஞ்சுகின்றனர். கரூர் சம்பவத்திற்குப் பிறகு நடிகர் விஜய் மீண்டு வந்து மக்களை மீண்டும் சந்திக்க வேண்டும். அவருக்கு உரிய உரிமைகள் வழங்கப்பட வேண்டும். மேலும் அரசு இதற்கான தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்,” என்றார்.
