கரூர் மாவட்டத்தில் நிகழ்ந்த கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக, தவெக தலைவர் விஜய் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்காமல் இருக்கிறார் எனத் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் கடும் விமர்சனங்களை முன்வைத்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த 10 நாட்களாக நீடித்த இந்த விமர்சனங்களுக்கு பதிலடியாக, விஜய் நேற்று பாதிக்கப்பட்ட குடும்பங்களை வீடியோகால் மூலம் தொடர்புகொண்டு நலம் விசாரித்தார். மேலும், பாதுகாப்பு அனுமதி கிடைத்தவுடன் கரூருக்கு நேரில் வருவதாக உறுதியளித்ததாக தெரிகிறது.

விஜய்யின் இந்த நடவடிக்கை அவரது கட்சி தொண்டர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. கடந்த சில நாட்களாக அவர் மீது  விமர்சனங்கள் எழுந்த நிலையில் அவர் தக்க பதிலடி கொடுத்துள்ளதாக தவெக ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக செயல்படுவதே தனது முதல் முன்னுரிமை என விஜய் கூறியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.