தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்ட மேடையில் பேசிய அக்கட்சி நிர்வாகியும், ரஜினிகாந்தின் தீவிர ரசிகருமான அசோக், ரஜினி குறித்து அவதூறாகப் பேசுபவர்களுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தவெக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா முன்னிலையிலேயே பேசிய அவர், தனது நேர்மைக்கும் வளர்ச்சிக்கும் ரஜினிகாந்தே காரணம் என்றும், ரஜினியைப் பற்றி யார் தவறாகப் பேசினாலும் தட்டிக்கேட்பேன் என்றும் ஆவேசமாகத் தெரிவித்தார்.

மேலும், ரஜினிகாந்த் குறித்து ஆதவ் அர்ஜுனா ஏற்கனவே தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு இந்த மேடையிலேயே அவர் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அசோக் பிடிவாதமாக வலியுறுத்தியது கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.