கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி நிகழ்வின் போது ஏற்பட்ட கோரமான கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ளது. இது தொடர்பான விசாரணைகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வரும் சூழலில், இந்தச் விபரீதம் குறித்து இளைஞர் ஒருவர் ஆக்ரோஷமாகப் பேசிய காணொளி சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. அந்த இளைஞர் தனது பேச்சில், விஜய் அவர்கள் கேரவன் வாகனத்தில் வரும்போது போதிய வெளிச்சம் இல்லாததே இத்தகைய உயிரிழப்புகளுக்கு முக்கியக் காரணம் என மிகக்கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

​வாகனம் கூட்டத்தை நெருங்கிய போதே மின்விளக்குகளை ஒளிரச் செய்திருந்தால், மக்கள் தூரத்திலிருந்தே விஜயைப் பார்த்திருப்பார்கள் என்றும், அப்படிச் செய்திருந்தால் மக்கள் முண்டியடித்துக்கொண்டு வாகனத்தை நெருங்கியிருக்க மாட்டார்கள் என்றும் அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார். அங்குக் கூடியிருந்தது வெறும் கட்சித் தொண்டர்கள் மட்டுமல்ல, விஜயைக் காண ஆவலோடு வந்த பெண்கள் மற்றும் குழந்தைகளும்தான் என்பதைச் சுட்டிக்காட்டிய