டெல்லியில் ராகுல் காந்தி தலைமையில் நடந்த காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்தில் பல அதிரடித் தகவல்கள் வெளியாகியுள்ளன. “நாங்கள் மீண்டும் வெற்றி பெறுவோம்” என்று நம்பிக்கையுடன் சொன்ன 70 சதவீதத்திற்கும் அதிகமான எம்.எல்.ஏ-க்களிடம், அவர்கள் மீதான புகார்கள் மற்றும் தொகுதியின் களநிலவரம் குறித்த ரகசிய சர்வே அறிக்கையைக் காட்டி ராகுல் காந்தி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
மேலும், திமுக கூட்டணியில் 30 இடங்கள் வரை ஒதுக்க வாய்ப்புள்ளதாகத் தெரிந்தாலும், ஆட்சியில் அதிகாரப் பங்கீடு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் உரிய பிரதிநிதித்துவம் என்பதில் காங்கிரஸ் மேலிடம் உறுதியாக இருப்பதை உணர்த்தியுள்ளது. விஜய்யின் தவெக (TVK) குறித்த ராகுலின் கேள்வி தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
