சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு காணொளி, காண்போரை நிலைகுலையச் செய்துள்ளது. ஒரு பொது இடத்தில் அமர்ந்திருக்கும் பெண் ஒருவர், தனது கையில் இருக்கும் பால் பாட்டிலை குழந்தையின் வாயில் வைப்பதற்குப் பதிலாக, குழந்தையின் காதுக்குள் வைத்து பாலை ஊற்றுகிறார். அவர் ஏதோ ஒரு சிந்தனையில் எதையோ பார்த்துக் கொண்டிருக்க, அவரது இந்த அலட்சியமான செயல் குழந்தையின் செவித்திறனைப் பாதிக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

​இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர், அந்தப் பெண்ணைத் தடுத்து நிறுத்தாமல் அமைதியாக வீடியோ எடுத்திருப்பதுதான் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. “வரலாறு காணாத வகையில் கேமராமேன்கள் யாருக்கும் உதவி செய்வதில்லை” என்று ஒரு பயனர் கிண்டலாகக் கருத்து தெரிவித்துள்ளார். மற்றொருவர், “வீடியோ எடுப்பவர் ஒரு வார்த்தை சொல்லித் தடுத்திருக்கலாமே?” என்று தனது ஆதங்கத்தைப் பதிவு செய்துள்ளார். ஒரு பிஞ்சு குழந்தையின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் இத்தகையச் செயல், மனிதநேயமற்ற மற்றும் பொறுப்பற்ற ஒரு போக்கையே காட்டுகிறது.