நடிகரும் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினருமான சரத்குமார், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் அரசியல் பயணம் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஒரு நடிகராக நான் வெளியே வரும்போதே என்னைப் பார்க்கப் பெருமளவில் கூட்டம் கூடுகிறது. அப்படியிருக்கையில், இதுவரை மக்களைச் சந்திக்காத, பொதுவெளிக்கு அதிகம் வராத ஒரு முன்னணி நடிகர் தெருவில் இறங்கி வரும்போது கூட்டம் அதிகமாகத்தான் வரும். ஆனால், அந்த ஆர்வம் வாக்குகளாக மாறும் என்று சொல்ல முடியாது” எனத் தெரிவித்தார்.
மேலும், தவெக ஒரு பெரிய அரசியல் கட்சியே கிடையாது என்றும், விஜய்யை தான் இன்னும் ஒரு முழுமையான அரசியல்வாதியாக ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் சரத்குமார் அதிரடியாகக் குறிப்பிட்டார். ” வெறும் கூட்டத்தை மட்டும் வைத்துத் தேர்தல் வெற்றியைத் தீர்மானிக்க முடியாது என்றும், மக்கள் செல்வாக்கு என்பது வாக்குகளாக நிரூபிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். விஜய்யைச் சுற்றியுள்ள கூட்டம் என்பது ஒரு நடிகரைப் பார்க்க வரும் ரசிகர்களின் ஆர்வமே தவிர, அது அரசியல் மாற்றத்திற்கான அறிகுறி அல்ல என்பதே சரத்குமாரின் கருத்தாக உள்ளது.
